எல்லைக்கோடுகள்
என் இனிய சகோதரனே!
உன்னால் உணர முடிகிறதா?
அருகருகே அமைந்த நிலப்பரப்பையும்
பிணைந்திருக்கும் மனிதர்களையும்
துண்டாடும்
இந்த எல்லைக்கோடுகளை?
எல்லைக்கோடுகள் உண்மையல்ல.
எல்லைக்கோடுகள் உண்மையல்ல.
அவை கற்பனையானவை
மனிதர்களால் வரையப்பட்டவை
பிரித்து ஆளும் சூழ்ச்சிக்காக.
தென்றலுக்கு கடிவாளம் போட கூடுமோ?
தென்றலின் இயக்கத்திற்கு
தடை போட முடியுமா?
சூரியன் ஒளி வீசுவதை
நிறுத்த முடியுமா?
என்னதான் முடியும்
அற்ப எல்லைக்கோடுகளால்?
தென்றலை போலவும்
சூரியனின் ஒளியை போலவும்
அன்பு
கட்டுக்குள் அடங்காது
எல்லைகளுக்குள் முடங்காது
வாருங்கள் சகோதரர்களே!
கைகோர்த்திடுவோம்
இந்த உலகத்தையே
ஒன்றாக்கி பிணைத்திடுவோம்
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem
Thank you so much Poet Saravanan Siva for translating my poem - Border into Tamil language and making it accessible to larger readership.