Symphony Of Frogs By Yavanika Shriram Poem by Kaniamudhu Shanmugam

Symphony Of Frogs By Yavanika Shriram

Rating: 4.0

Symphony of Frogs -By Yavanika Shriram.

Translated by Kaniamudhu Shanmugam

History never puts a questions in it's origin

Because the excess in one's self demands his entire life regarding it's prospect

As a compensation Moon demands love
Sun procreation

Seasonsthe sleep of animals things their metabolism

The five elements in their arbitrary nature

Burning senses in desires philosophy in it's cajoling history in it's beginning itself end their pleasure

Power in it'sstrict watch severe debates as spectator pretending to rule leaves behind only codes

Besides they in their reproduction in their intermittent replicas or their other thingsbecome tense and distressed

It's natural for the net that filters and empties the whole sea to become torn

Deserts never promise even a blade of grass

For the birth and death music sung by all riverbeds crop fields dwelling places plains

How liquidifying is the symphony of the winter frogs

தவளைகளின் சிம்பொனி - யவனிகா ஸ்ரீராம்

வரலாறு தனது தோற்றுவாய்களில் கேள்விகள் வைப்பதில்லை

ஏன் எனில் தன்னில் மிகுதி யடையும்ஒன்றைக் குறித்தப் புரிதல்ஒருவரது முழு வாழ்நாளையும் கோருகிறது

வாய்ப்பாக நிலவு காதலையும்
சூரியன் விருத்தியையும்

பருவங்கள் விலங்கின் உறக்கத்தையும் பொருட்கள் வளர்சிதைகளையும்

பஞ்சபூதங்கள் தன்னிச்சையிலும்

நொதிக்கும்புலன்கள் விருப்புறுதியிலும் தத்துவங்கள் நைச்சியத்திலும் வரலாறு எப்போதும் தன் தொடக்கத்திலும்
இன்பங்களை முடித்துக் கொள்கின்றன

அதிகாரம் பாவம் தன் கண்காணிப்பிலும்
கடும் தர்க்கத்திலும் பார்வையாளாராக பாவனை
ஆட்சி செய்வதில் வெறும் குறியீட்டுத்தன்மையை விட்டுச் செல்கின்றன

மேலும் அவை இனப் பெருக்கங்களின் அவற்றின் இடையூடானபிரதிகளின் அல்லது தனது மற்றமைகளின் முன்பு அவஸ்தையும்பதற்றமும் கொள்கின்றன

முழுக்கடலையும் அரித்து காலிசெய்யும் பெரும் வலைகள் தனக்குள் அனேக கிழிசல்களைக் ஏற்பது இயல்புதான்

பாலைவனங்கள் ஒருபுல்லையும் நமக்கு வாக்களிப்பதில்லை

நதிக்கரைகள் தானியவயல்கள் குடி இருப்புகள்சமவெளிகள் யாவும் பாடும் ஜனன மரண இசைக்கு

குளிர்காலத் தவளைகளின் சிம்பனிதான் எவ்வளவு நீர்மையானது.

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success