Smile - Yavanika Shriram Poem by Kaniamudhu Shanmugam

Smile - Yavanika Shriram

Smile - byYavanika shriraam

Translated by Kaniamudhu Shanmugam

Many days have passed from since
My legs in basement pits have been planted
Each time the bricks are arranged
Above my cheek level
Tied to the scaffoldings were
My shoulders
My hands from sand creeps are
Unable to be released
By the heat of cement deposition
MY breasts dry up
Walking incessantly
In unplastered wet rooms
Blood in my feet became pale
In walls scrubbed shiny
When my body touches scratches are made
For the given tobacco
My colleague sometimes
Aspires for conjugal relationship
With me as if he is my husband
Finally the buildings rise to the sky
And stand even then
Seeking chances for survival
With powdered face in city junctions
Seeing the masons
Smiles
My pain

Translated by Kaniamudhu Shanmugam on 13.11.2019. at 8.55 PM

புன்னகை - யவனிகா ஸ்ரீராம்
எனது கால்களை அஸ்திவாரக் குழிகளுக்குள்
ஊன்றி வெகுநாளாயிற்று
ஒவ்வொரு முறையும்
என் கன்னப் பரப்பிற்குமேலான
உயரத்தில் அடுக்கப்படுகின்றன செங்கல்கள்
சாரங்களில் தூக்கிக் கட்டப்பட்டவிட்டது
எனது தோள்கள்
மணற்சட்டியிலிருந்து கரங்களை
ஒரு போதும் விடுவிக்க முடியவில்லை
சிமெண்டின் உஷ்ணப் படிவத்தால்
மார்புகள் வற்றிச் சுருங்குகின்றன
பாவியிராத அறைகளெங்கும்
அலைபட்டு பாதங்களில்
இரத்தம் வெளிறிப்போனது
தேய்த்துப் பளபளப்பாக்கிய சுவற்றில்
என் சருமம் பட்டுக் கீறல்கள் விழுகின்றன
கொடுக்கும் புகையிலைக்காய்
என் தொழிலாளி சில நேரம்
என்னோடு சூலக தொடர்பிற்கு
விழைகிறான் கணவனைப் போலவே
இறுதியில் கட்டிடங்கள் வானளாவி
நின்றுவிடுகின்றன பின்னும்
உயிர்ப்பிற்கான வாய்ப்பு வேண்டி
முகப் பூச்சுடன் நகரச் சந்தியில்
மேஸ்திரிகளைக் கண்டு
புன்னகைக்கிறது
எனது வலி

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success