எங்கோ
ஒரு கிராமத்தில்
சுடுகாட்டில்
ஒரு பெண்ணின் பிணம்
எரிந்து கொண்டு இருக்கிறது
அந்த சிறு தேசத்தின்
உள்நாட்டு போரில்
ஒரு இளம் பெண்
ஆதிக்கவெறி ராணுவத்தால்
முழு நிர்வாணம் ஆக்கப்படுகிறாள்
ஒரு பெரிய நகரத்தின்
அடுக்கு மாடி குடியிருப்பில்
புது மணப்பெண் ஒருத்தி
கணவனின் கால்களில்
விழுகிறாள்
அவள் ஏதோ பேச ஆரம்பிக்கிறாள்
அவன் அவளின் வாயை
தன் கைகளால் மூடி விட்டு
அவளை கட்டிலில் கிடத்தி புணர ஆரம்பிக்கிறான்
அந்த நெரிசலான நகரத்தில்
பரபரப்பான சாலையில்
ஒரு ஆமை போல்
நகரும் பேரூந்தின் உள்ளே
ஒரு இளம் பெண்ணை ஒரு
காமுகன் இடித்து கொண்டு இருந்தான்
எங்கோ
ஒரு கிராமத்தில்
சுடுகாட்டில்
ஒரு இளம் பெண்ணின் பிணம்
எரிந்து கொண்டு இருக்கிறது
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem
poem is very sexy