எனது வரம்! Poem by Sanji-Paul Arvind

எனது வரம்!

உன்னுடன் உறவொன்று வரம் கேட்டேன்,
தனிமை வரமாய் கிடைத்தது.

உன்னுடன் சந்தோஷம் என்ற வரம் கேட்டேன்,
துக்கம் வரமாய் கிடைத்தது.

உன் அன்பினை வரம் கேட்டேன்,
வெறுப்பு வரமாய் கிடைத்தது.

உன்னை பிரியா வரம் கேட்டேன்,
பிரிந்து வாழ வரம் கிடைத்தது.

மறைந்துபோக வரம் கேட்டேன்,
நீ இல்லாமல் வாழ்க்கை வரமாய் கிடைத்தது.

மன அமைதியை வரம் கேட்டேன்,
கவலைகள் வரமாய் கிடைத்தது.

நீ வாழும்வரை நான் இருக்க வரம் கேட்டேன்,
மரணம் வரமாய் கிடைத்தது.

By
Sanji-Paul Arvind

எனது வரம்!
Monday, November 25, 2024
Topic(s) of this poem: love,truelove,tamil
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success