Jeans Pant And Waist Cord By Yavanika Shriram Poem by Kaniamudhu Shanmugam

Jeans Pant And Waist Cord By Yavanika Shriram

Jeens Phant and Waist Cord


Jeans Pant and Waist Cord

By Yavanika shriraam

Translated by Kaniamudhu Shanmugam

From unirrigated and land scotching hot with mirage and
goats straying without plants to feed on deserting the dust from my small land
I leave

Seeking debts
For boiled blackeye peas
From this wasteland I must
Compulsorily go

My agnatewomen
quarrelling and crying
for broken mud pots
and for their abdominal inertia hereafter there is no agitation in me.

Until my men in self contempt
turn their face and refuse to face me and until it rains and the water levels are up here there is no justification for the wait

It is enough to have seen
my father shed two drops of tears
sitting in the dredge of the well dug

At least I must escape
to places where mature cannabis plants grow in abundance

In cities beyond the hills
I might have news

What if my land becomes desolate
I will atleast wash cars in cities

ஜீன்ஸ் பேண்டும் அரைஞாண் பெல்ட்டும்
- யவனிகா ஸ்ரீராம்

நீர்ப்பாய்ச்சலற்று கொடுங்கானால் தெறிக்க
ஆடுகள் தளிரின்றித் திரியும் புழுதிகளை
உதறிக்கொண்டு என் சிறு நிலத்தினின்றும்
வெளியேருகிறேன்

அவித்தத் தட்டைப் பயிறுகளுக்காய்
கடன் கேட்டு நிற்கும்
இந்தப் பாழ் நிலத்தை விட்டு
போகத்தான் வேண்டும்

உடைந்த மண் சட்டிக்கு
சண்டையிட்டு அழும் என்
தாயாதிப் பெண்களின்
அடிவயிற்று ஆற்றாமைக்கு இனி
என்னிடம் சலனமில்லை

எனது மனிதர்கள் சுய வெறுப்பில்
முகம் திருப்பி என்னை மறுதலிக்கும்வரை
எப்போதோ பெய்யும் அடை மழையில்
இங்கு நீர் நிலைகள் பெருகும் வரை எனது
காத்திருப்பிற்கு நியாயமில்லை

வெட்டிய கிணற்று தூரிலமர்ந்து
எந்தை விட்ட இரண்டு கண்ணீர் துளிகள் போதும்

நானாவது தப்பிப் பிழைக்க
முதிர்ந்த கஞ்சா செடிகள் கொழிக்கும்
மலைக்கு அப்பாலான நகரத்தில்
எனக்குச் செய்தி இருக்கலாம்

என் சிறு நிலம் பாழாய் போனாலென்ன
நகரத்தில் கார்களையேனும் கழுவுவேன்

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success