Her hair flower
by Samayavel Karuppasamy
Her hair flower is safe in my closed fist thrust into my Levy Jeans pantpocket
Her flower was foundnear the turning corner on oneside of thewooden steps
She who is always running in haste
For everything might not have noticed this fallen follower from her hair
Even if she knows is it possible for her to come in search of it
In her very small clock she will find no time for it
How soft is that flower in my hand
How cool and chill
A fire sears through my fingers which hold that flower and the warmth fills my entire physique
She who returned
Sitting in front of me
Slanting her neck
Turning her head
Coughing softly
Keeping the writing slate in her laps
Starts writing
Even though many years have elapsed the flower fallen from her hairremains safe in my fist.
கூந்தல் மலர்
+++- - - - - - ++-+- - - - -+++- - - - +++.
கூந்தல் மலர்
அந்த மலர்
எனது லெவி கால்சட்டைப் பையில்
பொத்திய உள்ளங்கைக்குள் பத்திரமாக இருக்கிறது
மரப்படிக்கட்டுத் திருப்பத்தில்
ஒரு ஓரமாய்க் கிடந்தது அவளது மலர்.
எல்லாவற்றிற்கும்
அவசரம் அவசரமாக சதா
ஓடிக்கொண்டே இருக்கும்
அவளது கூந்தல்மலர் விழுந்துவிட்டதைத் தெரிந்திருக்க மாட்டாள்
தெரிந்தாலும் தேடி வரவா முடியும்?
அவளது மிகச்சிறிய கடிகாரத்தில்
அதற்கு நேரமே இருக்காது
கைக்குள் இருக்கும் மலர் தான்
எவ்வளவு மிருது
எவ்வளவு குளிர்ச்சி
மிருதுவைத் தீண்டும் விரல்கள் வழி
திகுதிகுவென்று ஒரு அனல் எனக்குள் நிறைகிறது.
திரும்பி வந்து எதிரே உட்கார்ந்திருப்பவள் கழுத்தைச் சாய்த்து தலையைத் திருப்பி
மெல்ல இருமி
கைக்குட்டையால் முகம் துடைத்து
எழுது பலகையை மடியில் இருத்தி
எழுதத் தொடங்குகிறாள்
ஆண்டுகள் கடந்தும்
கைக்குள் பத்திரமாக இருக்கிறது
கூந்தல் மலர்.
******
Good morning 🌻
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem