Is it the woman's lips
Or a fallen petal
Or an artist's display?
No, it's a leaf blade shed
22-08.2024
பாதையில் தெரிவது
கோதையின் கோவையிதழா?
மலரிலிருந்து சிதறிவீழ்ந்த மனங்கவர் மெல்லிதழா?
கண்ணுள் வினைஞனின் கவின்மிகு கைவண்ணமா?
சற்றே கவனித்து உற்றுப் பார்த்ததில்
மரத்திலிருந்து மண்ணில்வீழ்ந்த செவ்விலை இதுவென்ற
உண்மை புரிகின்றது! கற்பனை கலைகின்றது!
[கண்ணுள் வினைஞன் - ஓவியன்]
~மேகலா இராமமூர்த்தி
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem