எனக்கு உன் மேல் மயக்கம் Poem by Saravanan Sivasubramanian

எனக்கு உன் மேல் மயக்கம்

எனக்கு உன் மேல் மயக்கம்
உனக்கு ஏனடி தயக்கம்
உன் கை சேர்கையில் சொர்க்கம்
சொர்க்கத்தில்தானே
நெஞ்சமே விம்முகின்றதே உள்ளமே கொள்ளை போனதே
கண்களே கண்ணீர் சிந்துதே அது சந்தோசமே

எனக்கும் உனக்கும் பழக்கம்
முற் பிறவி முதலே தொடக்கம்
என் வாழ்வின் பாதையில் (ஏதோ) பூமழை
உன்னால்தானே
உன் நாணவில் முறிகின்றதே புது வானவில் தெரிகின்றதே
என் மன சோலையும் மலர்கின்றதே எங்கும் பூவாசமே

உனையும் எனையும் ஒன்று சேர்த்த சக்தி யாதடி?
மனத்துக்குளே மனதை சேர்த்த மாயம் தானடி
என்வாழ்வில் எந்நேரம் உன் அன்பு தாலாட்டு நிலையானதே
மண்மூடி போனாலும் என் தேகம் வெந்தாலும் கலையாததே
தேவதை தந்த வரமோ….

புலிவால் பிடித்த கதையோ
காதல் தவியாய் தவிக்கும் நிலையோ
(என்) உயிரை உன்னிடம் கொடுத்தேன்
(வெறும்) உடலாய் நான் இங்கு தவித்தேன்

எனக்கு உன் மேல் மயக்கம்
POET'S NOTES ABOUT THE POEM
This is poem in the form of tamil song based on the Premante Enti telugu Song tune
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success