சத்தியம் செய்துவிட்டால் சங்கடத்தில் மாட்டிவிடுவாய்
பீஷ்மனாய்
முற்பகல் செய்யின் பிற்பகல் விழையும்
பாண்டுவாய்
வஞ்சனை நெஞ்சில் கொண்டால்
வாழ்வனைத்தும் வீனாகும்
சகுனியாய்
ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு
குந்தியாய்
குரோதம் கொண்டால் விரோதம் பிறக்கும்
திருதராஷ்டிரனாய்
பெற்றோர்கள் செய்யும் பாவங்கள் பிள்ளைகளை பாதிக்கும்
கவுரவர்களாய்
பேராசை பெரும் அழிவினையே! உண்டாக்கும்.
துரியோதனன்
கூடா நட்பு கேடாய் முடியும்
கர்ணனாய்
சொல்லும் வார்த்தை கொல்லும் ஒரு நாள்
பாஞ்சாலியாய்
தலைக்கணம் கொண்டால் தர்மமும் தோற்கும்
யுதிர்ஷ்ட்ரனாய்
பலம் மட்டுமே பலன் தராது
பீமனாய்
இருப்பவர் இருந்து உதவினால் கிடைப்பதெல்லாம் வெற்றியே!
அர்ஜுனனாய்
சாஸ்திரம் அறிந்தாலும் சமயத்தில் உதவாது
சஹாதேவனாய்
விவேஹமில்லா வேகம் வெற்றியை தராது
அபிமன்யுவாய்
அண்ணனானாலும் அரசனானாலும் நீதி தவறாத
விதுரனாய்
தவமும் அவமாய்ப் போன
காந்தாரியாய்
பிறருக்கு வழிகாட்டி தன் மகனின் தரம் உயர்த்தா
துரோனனாய்
சிரஞ்சீவி வரம் பெற்றும் சின்னாபின்னம்
அஸ்வத்தாமா
நிதர்சனம் உணர்ந்தவன் நெஞ்சம் கலங்கிடான்
கண்ணனாய்
வாழ்க்கையும் ஒரு பாரதமே!
பொருமையுடன் பகுத்தறிவும்
நம்மிடம் இருந்தால்
நாம் வாழ்வை வாழ்ந்திடலாம் வெற்றியுடன்!
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem